Palmyra Nation press release
The Palmyra Nation press release was organized on the 16th
of August, 2018 at the Chennai Press Club. Along with Fr. Jegath Gaspar Raj,
some prominent leaders and activists also took part in the Press Release.
Thol. Thirumavalavan, Senior CPI leader R. Nallakannu, Senior
Advocate R. Gandhi, Former General Secretary of AIBOC, Thomas Franco were some
of the prominent personalities who attended the press release.
The contents of the actual press release are published below.
செய்தி வெளியீடு
பனை நாடு
தோழர் தொல் திருமாவளவன் அவர்களை வாழ்த்துகிறோம்
பனை நாடு
தோழர் தொல் திருமாவளவன் அவர்களை வாழ்த்துகிறோம்
பனை, தமிழரின் தேசிய மரம்; பண்பாட்டு
அடையாளம். அதன் பயன்களும்
சிறப்புகளும் பன்முகத்தன்மையுடைன. நீரின்றி வளரும்; வறட்சியைத்
தாங்கும்; புயல், வெள்ளப்பெருக்கு, சுனாமி அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தும். மிஞ்சும் மழைநீரை நிலத்தடி நீர் தட்டிற்கு
எடுத்துச் சென்று சேமிக்கும்.
ஏரி- குளங்களின் கரைகளை வலுப்படுத்தும். பதநீர், கள், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, தவுண், கருப்புக்கட்டி, பனங்கற்கண்டு என பூச்சிக்கொல்லி மருந்தோ செயற்கை உரங்களோ கலக்காத முழுமையானதொரு உணவுச் சங்கிலியினையும் பனைமரம் உறுதிசெய்கிறது. பனைமர ஓலை, தடி, விறகு ஆகியவற்றின் பொருளாதாரப் பயன்களும் பல.
இந்திய சுதந்திரத்தின்போது சென்னை மாகாணத்தில் மட்டுமே 5 கோடிப் பனை மரங்கள் இருந்ததாகப்
பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்று தமிழகத்தில்
50 லட்சம் கூட இல்லை எனுமளவுக்கு கற்பகத் தருவாகிய இம்மரம் அழிக்கப்பட்டுள்ளது. இப் பின்புலத்தில் பனைமரத்தின்
பன்முக முக்கியத்துவத்தைக் கருத்தில்
கொண்டு 2017- ஆம் ஆண்டு பனைநாடு இயக்கம் தொடங்கப்பட்டது.
பனைநாடு இயக்கத்தின் முக்கிய செயற்பாடாக ஒக்கி புயல் சீர்குலைத்த
குமரி மாவட்டத்தில் மட்டுமே கடந்த ஜூன்- ஜூலை மாதங்களில்
70,000 பனை விதைகள் நடப்பட்டன.
அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் 10 கோடி பனைமரங்களை தமிழகம் முழுதும் நட்டுவிட பனைநாடு இயக்கம் இலக்கு வரையறுத்துள்ளது. இந்நிலையில்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல் திருமாவளவன்
அவர்கள் தனது பிறந்தநாளை
பனைநடும் நாளாக அறிவித்ததோடு
மட்டுமன்றி கட்சித் தொண்டர்களுக்கு பனை விதைகள் சேகரிப்பது-
நடுவது பற்றி சிறப்பு பயிற்சி முகாம்களும்
நடத்தி, ஆகஸ்ட்- 17 தன் பிறந்த நாளன்று லட்சம் பனை விதைகளும் நடவிருப்பது
மிக முக்கியமான திருப்புமுனையாகும்.
அரசியற் கட்சித் தலைவர்கள்
தம் தொண்டர்களை ஆக்கபூர்வமான
இத்தகு சமூக மாற்றப் பணிகளில் ஈடுபடுத்துவது
மிகவும் முன்னுதாரணமான செயலாகும்.
பனை விரிவாக்கத்தை மக்கள் மயப்படுத்தும் இச்செயலினை
மாபெரும் நற்செயல் என பனைநாடு இயக்கம் வாழ்த்துகிறது. திரு. தொல் திருமாவளவன்
நீடூழி வாழவும், ஆண்டு முழுவதும் இந்த நற்பணியை தொடர்ந்து
செய்திடவும்- பனைநாடு இயக்கம் வாழ்த்துகிறது. செயலே வீரம் என்ற அடிப்படையில் பனைநடும் களப்பணிகளில் உண்மையான சிறுத்தைகளாய் முனைப்போடு
கடமையாற்றும் விடுதலைச் சிறுத்தைகளையும் பனைநாடு போற்றுகிறது. தமிழகத்தின்
அனைத்து கட்சிகளும் இயக்கங்களும்
கற்பகத் தருவும், தமிழர் பண்பாட்டுக் கருவூலமுமாகிய
பனைமரம் வளர்க்கும் அருட்பணியினில் தம்மை ஈடுபடுத்தி இம்மாநிலத்தை
செழிப்படையச் செய்திடவும் பனைநாடு இயக்கம் வேண்டுகிறது.
இந்த வரலாற்று இயக்கத்திற்குத் துணை தரவேண்டுமென தமிழக அரசையும் மாண்புமிகு
முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும்
பனைநாடு இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
தமிழ்த் திரு. ம. ஜெகத் கஸ்பார்
நிறுவனர், பனைநாடு இயக்கம்.
9003010460.
நிறுவனர், பனைநாடு இயக்கம்.
9003010460.
Comments
Post a Comment